கொண்டையம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்து முகாமை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன் பாளையம் ஒன்றியம் , கொண்டையம் பாளையம் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கொண்டையம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் இசிஜி ரத்தப் பரிசோதனை ஸ்கேனிங் கண் பரிசோதனை குழந்தைகள் பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆண்கள் பொது மருத்துவம் பெண்கள் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பரிசோதனைகளை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி , கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் பாலு , கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவகுமார் ,வட்டார மருத்துவ அலுவலர் புனிதா , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் . மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments