ஈரோடு: திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம் , கோசணம் ஊராட்சி , திட்டமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பிட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் பி.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி பி.வி.இளங்கோ, நம்பியூர் பேரூராட்சி 8வது வார்டு செயலாளர் கருப்பட்டி ஆனந்த், நம்பியூர் பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் ஆனந்த ,நந்தகுமார், மைக் பழனிசாமி, கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ , மாணவிகள், திமுக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துகொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments