பரந்தூர் விமான நிலைய பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியது தமிழக அரசு - MAKKAL NERAM

Breaking

Saturday, September 7, 2024

பரந்தூர் விமான நிலைய பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியது தமிழக அரசு

 


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சுமார் 5 ஆயிரத்து 476 ஏக்கர் பரப்பளவில் உருவாகவுள்ள இந்த விமான நிலையம், குடியிருப்புகள் மற்றும் நீர் நிலைகளை அழித்து உருவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.  திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், பரந்தூரில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment