• Breaking News

    திருத்தணி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


    திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி தலைமையில் பட்டாபி ராமபுரம், தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்ஜெயபுரம், முருக்கம்பட்டு, மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, மாநில அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினர்.

     இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆவின் சேர்மன் கவிச் சந்திரன், நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், திருத்தணி ஒன்றிய அவைத்தலைவர் குப்பன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, பத்மாபுரம் சுரேஷ், ராமசந்திரன், தாடூர் கிளை கழக செயலாளர் ரமணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments