பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 17, 2024

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பாஜகவினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் ‌ நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாஜக கட்சியின் மீது என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.

No comments:

Post a Comment