என்னை ராஜினாமா செய்ய சொன்னாங்க..... கொளுத்திப்போட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்...... - MAKKAL NERAM

Breaking

Friday, September 13, 2024

என்னை ராஜினாமா செய்ய சொன்னாங்க..... கொளுத்திப்போட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்......

 

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூடநம்பிக்கை குறித்த சொற்பொழிவை மாணவர்கள் மத்தியில் நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை நேற்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தின் எதிரொலியாக resign anbil Mahesh என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் மிகவும் ரெண்ட் ஆனது. இந்த ஹேஷ் டேக்கை திமுகவினரே மிகவும் வைரலாக்கினார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேட்டபோது, திமுக கொள்கைவாதிகள். அப்படித்தான் இருப்பார்கள். தவறு நடந்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். எனக்கு திமுகவினர் மீது துளியும் கோபம் கிடையாது. ஏதோ தவறு நடந்ததை உணர்த்துவதாகவே நான் இதை பார்த்தேன் என்று கூறினார். மேலும் திமுகவினரே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment