• Breaking News

    பொன்னேரி: ரயில் தண்டவாள இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டதால் அதிகாலை இரண்டு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு..... ரயில்வே எஸ்.பி ஈஸ்வரன் தலைமையில் போலீசார் விசாரணை......


    பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளங்களில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் அதிகாலை 2மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு. கடந்த 4நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்த நிலையில் இன்று போல்ட் கழற்றப்பட்டன.

     வடமாநிலங்களை இணைக்க கூடிய சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயிலைக் கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா என ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை. இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை.

     இதனால் அதிகாலை காலை இரண்டு மணி முதல் 4 மணி வரை ரயில் ரயில்கள் நிறுத்தப்பட்டு பிறகு ரயில் பயணம் தொடங்கியது இதனால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    No comments