வாகன வேகத்தை கண்காணிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 3, 2024

வாகன வேகத்தை கண்காணிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

டெல்லி உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அனைத்து மாநிலங்களிலும் வாகன வேகத்தை கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி வாகன வேகத்தை கண்காணிக்க அனுமதிக்கும் வாகன சட்டத்தின் 136 ஏ பிரிவினை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக 136 ஏ பிரிவில் வாகனத்தின் வேகத்தை  இயந்திரங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம் வாகன வேகத்தை கண்காணிக்கும் சட்டத்தை அமல்படுத்தாத தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக இந்த சட்டத்தை அமல்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment