ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை..... கடை உரிமையாளர்களை தாக்கிய பொதுமக்கள்..... - MAKKAL NERAM

Breaking

Sunday, September 15, 2024

ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை..... கடை உரிமையாளர்களை தாக்கிய பொதுமக்கள்.....


 காசிபூரில் உள்ள குஷி ஜூஸ் அண்ட் ஷேக் என்ற ஜூஸ் கடை உள்ளது. இந்தக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஜூஸில் சிறுநீர் கலந்து விற்கப்படுவதாக தெரியவந்தது. அதனால் வாடிக்கையாளர்கள், கடையின் உரிமையாளர்களை தாக்கினர். இதில் உரிமையாளர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அதோடு காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment