• Breaking News

    சென்னை புறநகர் மாவட்ட மாணவர் அணி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


    தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் முறையாக அறிவித்தார்.அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பை அதன் தலைவரும் நடிகருமான விஜய் தற்சமயம் அறிவித்துள்ளார்.

    இதனை சென்னை புறநகர் மாவட்ட மாணவர் அணி தமிழக வெற்றி கழகம்  சார்பாக  சென்னை புறநகர் மாவட்ட மாணவரணி தலைவர் ஆலந்தூர் எஸ் மதன் அவர்களின் தலைமையில் கன்டோன்மென்ட் நகர மாணவரணி தலைமை தளபதி எஸ். கீதன்ராஜ் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் நகரத்தில் தொண்டர்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்  உடன் நிகழ்ச்சியில் சந்தியப்பன்  தீபக் ஆண்ட்ரூஸ்  D.S.குமார் வினோத் குமார் ஷாம்  உட்பட கண்டோன்மெண்ட் நகர மாணவரணி தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments