மீஞ்சூரில் புகழ்பெற்ற ஸ்ரீ மன்னாரி ஈஸ்வரர் பச்சையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..... ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..... - MAKKAL NERAM

Breaking

Sunday, September 8, 2024

மீஞ்சூரில் புகழ்பெற்ற ஸ்ரீ மன்னாரி ஈஸ்வரர் பச்சையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..... ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.....

 

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் உள்ள இராமா ரெட்டிபாளையத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நான்கு கால யாக பூஜைகளுடன் துவங்கி கடம் புறப்பாடு நடைபெற்று விநாயகர்,அக்னி தேவன்,வால் முனிஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு ஸ்ரீ மன்னாரீஸ்வரர் பச்சையம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஓம் சக்தி எனும் மந்திரம் முழங்க பிரார்த்தனை செய்து கொண்டனர். புனித நீர் தெளிக்கும் போது விண் அதிர வான வேடிக்கைகளுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்  அபிஷேக ஆராதனைகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் இந்நிகழ்வில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேலு துணைத்தலைவர் எம், டி, ஜி, கதிர்வேலு குடும்பத்தினருக்கு கலசம் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மீஞ்சூர் நகர முன்னாள் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் அதிமுக தமிழரசன் மற்றும் சுற்று வட்டார் பகுதி சேர்ந்த  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு  சுவாமியை வழிபட்டனர் இதைத் தொடர்ந்து நன்கொடையாளர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் கலசங்கள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.





No comments:

Post a Comment