புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் வேஸ்ட் பேப்பரால் விநாயகர் சிலை செய்து வழிபாடு செய்ய வைத்திருப்பது பலரையும் வியக்கவைத்து உள்ளது. திருக்களம்பூரை சேர்ந்த காளிதாஸ் இவரது மகன் பாலாஜி என்பவர் வேஸ்ட் பேப்பர்,பழைய அட்டை பெட்டிகளை கொண்டு விநாயகர் சிலை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்யும் வகையில் வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக மாணவர் பாலாஜியிடம் கேட்டபோது எவ்வித பொலியூஷன்றி முழுமையாக பழைய பேப்பர்,பழைய அட்டை பெட்டிகளை வைத்து இரண்டு நாட்களாக நான் செய்த இந்த விநாயகர் சிலை பொதுமக்கள் வழிபாடு செய்ய வைத்திருக்கேன் என்றும்.பொதுமக்கள் இதனை வழிபாடு செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.
மேலும் முழுமையாக பழைய பேப்பர், பழைய அட்டை பெட்டிகளை கொண்டு தயார் செய்த இந்த விநாயகர் சிலையை பலரும் வியர்ந்து பார்ப்பதுடன் விநாயகர் சிலையை செய்த மாணவர் பாலாஜியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் இரா.பாஸ்கர்
No comments:
Post a Comment