• Breaking News

    கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் குவிந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்


    கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தை கும்மிடிப்பூண்டி மற்றும்  அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த செங்குன்றம் பொன்னேரி.சுற்று வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர்  டி.எஸ்.பி அலுவலகத்தில் குவிந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.

    கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை  சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, பாண்டூர் வழியாக  இருந்து எம்.சாண்ட், ஜல்லி, வெட் மிக்ஸ் போன்ற பொருட்களை ஜிஎஸ்டி வரி செலுத்தி  கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக எல்லை பகுதிகளான ஆரம்பாக்கம்  மற்றும்  பொம்மாஜிகுளம் வழியாக தமிழக பகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,  செங்குன்றம் மற்றும் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த 25 நாட்களாக தமிழக எல்லைப்பகுதியான ஆரம்பாக்கம் சோதனை சாவடி மற்றும் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பொம்மாஜிகுளம் சோதனை சாவடி வழியாக எம்.சாண்ட், ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை அனுமதிக்காமல் தடுத்து வந்துள்ளனர். 

    இதனால் செங்குன்றம் சுற்று வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்த்து 2ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வந்துள்ளனர். இதனால் இந்த இரு எல்லைப் பகுதிகளில் வழியாக டிப்பர் லாரிகளை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்ர்பில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

    ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழலில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் இது தொடர்பாக பேச டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  தொடர்ந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அண்ணாதுரை வேறு பணி நிமித்தமாக இருந்ததால் லாரி  உரிமையாளர்கள்  சங்கத்தினர், 2மணி நேரம் காத்திருந்து பின் இது தொடர்பாக பொம்மாஜிகுளம் சோதனை சாவடி அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க கோரி மனு அளித்து கலைந்து சென்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி போன்ற பகுதிகளில் உள்ள ஆந்திர தமிழக எல்லை வழியாக ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றி லாரிகள் தமிழகத்திற்கு வரும் நிலையில், கும்மிடிப்பூண்டி இரு மாநில எல்லைகள் வழியே டிப்பர் லாரிகள் வர போலீஸார் தடுத்து நிறுத்துவதாகவும், இதனால் கடந்த 25 நாட்களாக தங்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க கோரினர்.

    இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த சவுடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், செங்குன்றம் சுற்று வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் காமராஜ்,  செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கணேசன் உடன் இருந்தனர்.

    No comments