திமுக மாணவர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜ் - MAKKAL NERAM

Breaking

Sunday, September 29, 2024

திமுக மாணவர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜ்

 


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய,நகர பேரூர்,அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.இந்த நேர்காணலில் நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி (எ) ராஜேஷ்  உடன் தமிழழகன்,சேதுராமன், விக்னேஷ் உதயம், பி தனலட்சுமி இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள்  மு.மணிபாலன்,  இரா அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அவை தலைவர் மு.பகலவன் ,  மு.கதிரவன், பொது உறுப்பினர்கள் பி வெங்கடாஜலபதி பா.செ. குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கழகச் செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அதைத்தொடர்ந்து புதிதாக பதவி ஏற்க உள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆவடி சாமு நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியும் மற்றும் மாணவர் அணி செயல்பாடுகள் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கி பேசினார்.இந்த நேர்காணலை மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் எஸ் மோகன் மாநில மாணவரணி துணைச் செயலாளர் மன்னை.த. சோழராஜன் ஆகியோர் நேர்காணல் நடத்தி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் டி.கே. சந்திரசேகர்,பா.சுகுமாரன், சக்திவேலு, நா.செல்வ சேகர், கா‌.சு. ஜெகதீசன் வல்லூர் ரமேஷ்ராஜ், ஜான்  (எ)பொன்னுசாமி, மற்றும் ஆரணிபேரூர் செயலாளர் பி. முத்து பொன்னேரி ரவிக்குமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் முடிவில் மாணவர் அணி துணை அமைப்பாளர் டி.ஜெ‌.ஜி தமிழரசன் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment