பொன்னேரி அருகே கூடுவாஞ்சேரி ஊராட்சியில், உள்ள மூன்று குளங்கள் வேளாண் துறை மூலம் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் அனைத்தும் உயர்த்தி பலப்படுத்தப்பட்டும் உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் மதுவிலக்கு மற்றும் காலால் துறையின் உதவி ஆணையராக பணியாற்றி கொண்டிருக்க கூடிய செந்தில்நாதன் தனது சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில் புதிதாக தூர்வாரப்பட்ட அந்த குளங்களின் கரைகளை, வருங்காலங்களில் மழைகாலங்களில் ஏற்படக்கூடிய மண் அரிப்புகளில் இருந்து காப்பாற்றவும், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த குளங்களின் கரைகளை சுற்றி பனை விதைகளை நடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, நேற்று அவர் தூர்வாரப்பட்ட குளங்களின் கரைகளில் பனை விதைகள் செய்யும் பணியை, பனைவிதையை நடவு செய்து துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment