தமிழ்நாடு துணை முதலமைச்சராக இன்று உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையத்தில் குத்தாலம் வடக்கு மற்றும் பேரூர் திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும்,முன்னாள் குத்தாலம் எம் எல் ஏவுமான குத்தாலம் பி.கல்யாணம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அப்போது திமுகவினர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் வாழ்க,துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்க என கோஷங்களை எழுப்பினர். அப்போது திமுக குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன்,குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளிட்ட குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment