மயிலாடுதுறை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட துணை கண்காணிப் பாளர் திருப்பதி வழிகாட்டுதலின்படி மணல்மேடு காவல் நிலையம் சார் பில் பெட்டிசன் மேளா நிகழ்ச்சி மணல்மேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் மணல்மேடு காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து ஏற்கப்பட்ட 20 மனுக்களில் 15 உரிய தீர்வு பெற்றுத் தரப்பட்டது.இந்த நிகழ்வில் மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் திருமுருகன் கலியபெருமாள்,மணிமாறன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜாஜி சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment