உருட்டுனா இதான் உருட்டு..... சித்தர் சொன்னார், அதான் பேசினேன் - மகாவிஷ்ணு வாக்குமூலம் - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 8, 2024

உருட்டுனா இதான் உருட்டு..... சித்தர் சொன்னார், அதான் பேசினேன் - மகாவிஷ்ணு வாக்குமூலம்


 தமிழகத்தில் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நிலையில் அது மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

அதோடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை ஏர்போட்டில் வைத்தே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகத்தான் பேசியதாகவும் மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசவில்லை எனவும் மகாவிஷ்ணு கூறியுள்ளார். அதோடு சித்தர் தான் தன்னை வழிகாட்டுவதாகவும், சித்தர்கள் தன்னுடன் பேசுவார்கள் என்றும் அவர்கள் கூறியதால் தான் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன் என்றும் கூறியுள்ளார்.

தன்னுடைய பேச்சு தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் மகாவிஷ்ணு கூறியுள்ளார். இதுபோன்று பல்வேறு இடங்களில் மாணவர்களை  நல்வழிப்படுத்துவதற்காக பேசி உள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சித்தர் சொன்னதால்தான் அப்படி பேசினேன் என்று மகாவிஷ்ணு கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here