மயிலாடுதுறை: 1989 - 1990 ஆண்டில் காவலர் பயிற்சி பெற்று தற்போது காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் மீண்டும் சங்கமித்த நிகழ்வு நடைபெற்றது
தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் 1989 - 1990 ஆகிய ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறில் காவலர் பயிற்சி பெற்றோர் தற்போது பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி மற்றும் எஸ்எஸ்ஐ உட்பட பல பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இவர்களின் முதல் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமித்த இரண்டாம் நிகழ்வு மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பின்னர் காவலர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை சக காவலர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் சில காவலர்கள் பங்கேற்க முடியாத நிலையில் வீடியோ கால் மூலம் இணைந்து தங்களது நண்பர்கள் அனைவரையும் பார்த்து புன்னகை முகத்துடன் நினைவுகளை பரிமாறியது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.இறுதியாக அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
No comments