தமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பு 2023 – 24 எண் 34ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி ஏழைகளுக்கு இலவச திருமண திட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவான்மியூர்அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோயில் திருமணத்தை நடத்தி வைப்பதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ. 60,000/- மதிப்பில் சீர்வரிசை வழங்கி இன்று 2 ஜோடிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கும்மிடிபூண்டி எம் எல் ஏ, டி ஜே எஸ் கோவிந்தராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராஜசேகர குருக்கள், திருவள்ளூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் லஷ்மிநாராயணன் மற்றும் செயல் அலுவலர் மாதவன் . இராஜசேகர் சரவணன் ,பிராபாகரன், பாலாஜி ஆய்வர் கார்த்திகேயன், ஸ்ரீதர், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம்.மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் திருமண விட்டார் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment