சத்தியமங்கலம்: கொமாரபாளையம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் அதிமுக 53-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எம்எல்ஏ பண்ணாரி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Friday, October 18, 2024

சத்தியமங்கலம்: கொமாரபாளையம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் அதிமுக 53-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எம்எல்ஏ பண்ணாரி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்


ஈரோடு  மாவட்டம், பவானிசாகர் தொகுதி, சத்தியமங்கலம்  ஒன்றியம் ,  கொமாரபாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் அஇஅதிமுக 53-ஆம்  ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி  தலைமை தாங்கி அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய  செயலாளர் சி.என். மாரப்பன்,  கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உடன்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. காளியப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி  குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், ஒன்றிய  செயலாளர்கள் வி.ஏ. பழனிச்சாமி , என்.என். சிவராஜ் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியா பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வடிவேலு, ரங்கராஜ் , ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராசு,முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோ, கிளை  செயலாளர்கள் யுவராஜ், சித்தப்பன் , வக்கீல் பழனிச்சாமி ,  தங்கவேலு மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment