அறந்தாங்கியில் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பில் மனநல கருத்தரங்கு நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, October 18, 2024

அறந்தாங்கியில் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பில் மனநல கருத்தரங்கு நடைபெற்றது

 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மனநல கருத்தரங்கு நைனா முகம்மது பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமையில் நைனா முகமது கல்லூரி முதல்வர் திருச்செல்வம்,  தாளாளர் முகமது ஃபாருக் ஆகியோர் முன்னிலையில், செயலாளர் ஆண்டோ பிரவின் அனைவரையும் வரவேற்றார்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மருத்துவர் தட்சிணாமூர்த்தி, மருத்துவர் விஜய் ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு மனநல கருத்துரையாற்றினார்கள்.கல்லூரியின் அனைத்து மாணவிகள், இருபால் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட 750 பேர் மனநல கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment