தலைநகர் டெல்லியில் ரூ. 5600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - MAKKAL NERAM

Breaking

Thursday, October 3, 2024

தலைநகர் டெல்லியில் ரூ. 5600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

 


தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மகிபல்பூர் பகுதியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர் இந்த சோதனையில் 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமசு குமார், அவுரங்கசீப் சித்திக், பாரத் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment