கும்மிடிப்பூண்டி அருகே காராமணி மேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சி காராமணி மேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த சனிக்கிழமை அனுக்ஞை குரு வந்தனம், யஜமான சங்கல்பம் , விஷ்வக்ஸேனர் ஆராதனை, மகா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், சுதர்சன ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாஹுதி,தீபாரதனை யாகசாலை நிர்தானம், சுவாமி சிலைகள் கரிக்கோலம் வருதல், வாஸ்து சாந்தி,அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், கும்ப திருவாராதனம், அக்னி பிரதிஷ்டை, முதல் கால யாக பூஜை ,தீபாரதனை,பிரசாதம் வழங்குதல், விமான கோபுரம் பிரதிஷ்டை, மூலவர் பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை புண்ணியாக வாசனம், கும்ப திருவாராதனம், இரண்டாம் கால யாக பூஜை , சுவாமி சிலைகளுக்கு கண் திறத்தல், விசேஷ திரவங்களால் ஆராதனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் காலை யாக பூஜை, ரக்ஷா பந்தனம், திவ்ய பிரபந்த சாற்று முறை, வேதநாத கீத உபச்சாரம் நடைபெற்றது .தொடர்ந்து கும்பாபிஷேக தினமான திங்கட்கிழமை விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, கும்ப திருவாராதனம், நான்காம் கால யாகபூஜை பூர்ணஹுதி, யாத்திரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் ஆலயத்தின் விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மூலவர் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகமும் பின்னர் மகா அபிஷேகம், தீபாரதனை, தீர்த்த பிரசாதம் விநியோகம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது .இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை காராமணி மேடு கிராம மக்கள் உள்ளாட்சித் பிரதிநிதிகள், விழா குழுவினர் சிறப்பாக நடத்தினர்.
No comments