நெல்லை: ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்காத அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - MAKKAL NERAM

Breaking

Thursday, October 10, 2024

நெல்லை: ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்காத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

 


நெல்லையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்து நோயாளிகளை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது.நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிச்சியான சூழல் நிலவியது.

இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால், மார்கெட் அருகேயுள்ள மனக்காவலன் பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினுள் மழைநீர் புகுந்தது.

பலமணி நேரமாகியும் மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வராததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்காத மருத்துவமனையின் நிலை, இனிவரும் மழைக்காலங்களில் என்னவாகும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் மக்களின் நலனை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம், மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment