தேனி: மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனி பங்களாமேடில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மலிவு விலை ( அம்மா)உணவகத்தைசெயல்படுத்திடவும் மருத்துவமனை வளாகத்திற்குள் தனியார் கேண்டின்களின் உரிமங்களை ரத்து செய்ய கோரியும் மற்றும் தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் உப்புத்துறை பஞ்சாயத்து ஜெ ஜெ நகர் மற்றும் இந்திரா காலனியில் குடியிருக்கும் 300- க்கும் மேற்பட்ட பளியர் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரங்களான குடிமனை பட்டா காண்கீரிட்வீடு.கழிப்பிட வசதி மேல்நிலைத் தொட்டி ஆதார் கார்டு ஓட்டுரிமம் குடும்ப அட்டை மின்சார வசதி 2 ஏக்கர் விவசாய நிலம் என. பல்வேறு அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பங்களா மேடு பகுதிபில் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில முன்னணி நிர்வாகிகள் தலைவர்களான வழக்கறிஞர் சுதந்திர பிரியா ,வழக்கறிஞர் சூரிய நாராயணன்,பாண்டிச்சேரி தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினார்கள்.மற்றும் கூட்டத்தை நிறைவு செய்து இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் கண்டன விளக்க உரையாற்றினார்.
மேலும் திண்டுக்கல் திருப்பூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் நிலக்கோட்டை மதுரை கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களை சார்ந்த தலைவர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் தேனி மாவட்டத்தின் அவை தலைவர் முத்து ஆலோசகர் சுப்பிரமணியன் இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன் செயலாளர் காந்தி சென்ராயன் கொபசெ அமைப்பாளர் தங்கமாலை மற்றும் அனைத்து முன்னனி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பொதுமக்களும் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
No comments