நாமக்கல்: ரயில்வே சுரங்கப்பாதையில் தத்தளித்த கல்லூரி பேருந்துகள் - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 22, 2024

நாமக்கல்: ரயில்வே சுரங்கப்பாதையில் தத்தளித்த கல்லூரி பேருந்துகள்

 

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் இரண்டு தனியார் கல்லூரி வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

வாகனங்களின் டயர்கள் முழுவதுமாக நீரில் சிக்கியதால் வெளியே வர முடியாமல் பேருந்தின் உள்ளே இருந்த 40 மாணவர்களும் தவித்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக போராடியும் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் மாணவர்களை பேருந்தில் இருந்து பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த சுரங்கப் பாதையில் நீரை அகற்றும் மோட்டார் பழுதடைந்துள்ளதால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. சுரங்கப்பாதையில் நீர் தேங்கியது குறித்து மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment