காதலிப்பதற்கு தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்..... இளம்பெண்கள் பேரணி - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 22, 2024

காதலிப்பதற்கு தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்..... இளம்பெண்கள் பேரணி

 


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் கல்லூரி மாணவிகள் நடத்திய வினோத போராட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அதேசமயம் இந்த வீடியோ சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. அதாவது காதலிப்பதற்கு தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் என்று பதாகைகள் ஏந்தி கொண்டு இளம்பெண்கள் வரிசையாக பேரணி சென்றுள்ளனர்.

 இளம் பெண்கள் கையில் பல்வேறு பதாகைகள் இருந்த நிலையில் அதில் “தாடியை நீக்கி காதலை காப்பாற்று” என்ற பதாகை மிகுந்த பேசும் பொருளாக மாறி உள்ளது.அதோடு தாடி வேண்டுமா அல்லது காதலி வேண்டுமா முடிவு உங்கள் கையில் என்ற வாசகம் அடங்கிய பதாகையும் வைத்துள்ளனர். 

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தாடி வைத்த ஆண்கள் அழகாக இருக்கிறார்களா அல்லது தாடி இல்லாத ஆண்கள் அழகாக இருக்கிறார்களா என்று நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டம் உண்மையாகவே கல்லூரி மாணவிகள் நடத்தினார்கள் அல்லது ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக நடத்தினார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment