• Breaking News

    தேனி: கம்பத்தில் உள்ள தனியார் சிறார் பள்ளியில் உணவு திருவிழா நிகழ்வு கொண்டாடப்பட்டது


    உலகம் முழுவதும் இன்று உலக உணவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் டைனி பார்க் என்னும் தனியா சிறுவர் பள்ளியில் உலக உணவு திருவிழா நிகழ்வு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பழங்கள் நவதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பயிர் வகைகள் மற்றும் அவித்த கிழங்கு உணவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்வு குறித்து பள்ளியில் தாளாளர் மக சபீன் அவர்கள் கூறும்போது இந்த ஆண்டு 2024 உலக உணவுத் திருவிழாவில் கருப்பொருளாக தண்ணீரே உணவு தண்ணீரே வாழ்க்கை என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர்களுக்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் பயிரிலிருந்து உருவாக்கப்படும் அரிசியில் இருந்து சாதம், தோசை, இட்லி போன்ற உணவுப் பொருட்களை நமது பெற்றோர்கள் தயாரித்து வழங்குகின்றனர். இதனை நாம் உட்கொண்டு வாழ்ந்து வருகிறோம். அதே போன்று நவதானிய உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது பலவகை நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம் என குழந்தைகளுக்கு எடுத்து கூறினார்.

    No comments