மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் லயன்ஸ் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் தண்டாயுதபாணி தலைமை வகித்தார், லயன்ஸ் செயலாளர் கவாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார்,சிக்கந்தர் ஹயாத்கான்,பார்த்திபன்,சின்னதுரை ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தனர். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கண் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையை பெற்றுச் சென்றனர் மேல்சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை தனி பேருந்து மூலம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தங்குமிடம் உணவு இலவசமாக வழங்கப்பட்டு பின்னர் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் அவர்களது இருப்பிடத்திற்கே அழைத்து வரப்படுவார்கள்.

0 Comments