கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில் மோதியதில் தமிழர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலைபார்த்து வந்தனர்.ஷொர்ணுார் பகுதியில், பாரதபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் குப்பைகளை அவர்கள் அகற்றி கொண்டிருந்தனர்.
அப்போது, டில்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. அனைவரும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் 4 பேரும் உயிரிழந்தனர். 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. அதில், இரண்டு பேர் சேலத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி என தெரியவந்துள்ளது. மற்றவர் பற்றிய விபரம் வெளியாகவில்லை.மற்றொருவரின் உடலை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment