கார் மோதி பலியான 5 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, November 27, 2024

கார் மோதி பலியான 5 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 


சென்னையில் இருந்து இன்று மாமல்லபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பழைய மகாபலிபுரம் பகுதியில் சாலையோரமாக சில பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அங்கு சாலையோரம் 5 பெண்கள் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அவர்கள் மீது கார் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மது போதையில் கார் ஓட்டி வந்து வாலிபர்கள் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்த நிலையில் அப்பகுதி மக்கள் இருவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பண்டித மேடு பகுதியில் கார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் அதன்படி உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து.

No comments:

Post a Comment