• Breaking News

    நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..... தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு......


    அக்டோபர் மாத தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று தீபாவளியிலும் சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் 59,640 ரூபாய் வரையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் குறைந்து ஒரு சவரன் 59,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 70 ரூபாய் வரையில் குறைந்து 7385 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7890 ரூபாய் க்கும், ஒரு சவரன் 63,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 3 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 106 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    No comments