நாமக்கல்: சிலம்பம் மற்றும் அடிமுறை போட்டியில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, November 21, 2024

நாமக்கல்: சிலம்பம் மற்றும் அடிமுறை போட்டியில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு


நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட அடிமுறை சங்கம் இணைந்து நடத்திய நாமக்கல் மாவட்ட சிலம்பம் மற்றும் அடிமுறை போட்டி குமரமங்கலம், மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது போட்டிகள் PRD நிறுவன தலைவர் மற்றும் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க சேர்மன் PRD பரந்தாமன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் தலைவர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சிலம்பம் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் துவக்கிவைத்தார். அடிமுறை போட்டியை திருச்செங்கோடு வேலா ஸ்டில்ஸ் இயக்குனர் நவீன்குமார் அவர்கள் துவக்கிவைத்தார்.இந்த போட்டிக்கு நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து 600 க்கும் மேற்பட்ட சிலம்பம் மற்றும் அடிமுறை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செயலாளர் நவீன்குமார் நன்றியுரை தெரிவித்தார்.

No comments:

Post a Comment