• Breaking News

    திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் கொட்டித் தீர்த்த கனமழையால் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரம்


    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வரும் 27 28 தேதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட விடுக்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் நாகை வேதாரண்யம் திருக்குவளை சுற்று வட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது.


     இந்த நிலையில் பல்வேறு ஊராட்சிகளில் மழைநீர் தேங்கியது அதன் எதிரொலியாக இன்று திருக்குவளை அருகே உள்ள மடப்புரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி ரமேஷ் மேற்பார்வையில் பணியாளர்கள் மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட களத்திடல் கரை பிள்ளையார் கோவில் தெரு , மடப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

     மேலும் மழை நீரை வடிய வைத்து கழுவுநீரில் கொசு உற்பத்தி ஆகாத அளவிற்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த மருந்து மற்றும் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    No comments