நம்பியூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ வங்கி மூலம் கடனுதவி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ வங்கி மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி நடராஜன் தலைமை தாங்கினார்.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு 5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ரூ 10 லட்சத்துக்கு காப்பீடு மற்றும் , தூய்மை பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் துவங்க கால்நடை வளர்ப்பு, டீ கடை, ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கபடுகிறது.அதற்கான விண்ணப்ப படிவம் நம்பியூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும் , நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் ப. செந்தில்குமார் கலந்துகொண்டு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார்.நிகழ்ச்சிகள் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் நாகேஸ்வரி, சுப்பிரமணியம், வேமண்டம்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments