ராமேஸ்வரம் மீனவர் நடுக்கடலில் தவறி விழுந்து மாயம் - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

ராமேஸ்வரம் மீனவர் நடுக்கடலில் தவறி விழுந்து மாயம்


 ராமேசுவரத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 391 விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 

இதில் அருண்குமார் என்பவர்க்கு சொந்தமான விசைப்படகில் 8 பேர் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுரேஷ் (43) என்ற மீனவர் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மாயமானார்.படகிலிருந்த சக மீனவர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மீனவர்கள் ஞாயிற்றக்கிழமை காலை கரைக்கு திரும்பி வந்தனர்.

கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் மெரைன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . மேலும் மூன்று படகில் மீனவர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment