TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு


 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள்) நடைபெற இருக்கிறது. 

இதனை முன்னிட்டு தற்போது டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஷிப்ட் முறையில் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் காலை தேர்வு எழுத வருபவர்கள் 8:30 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுத வருபவர்கள் 1:30 மணிக்குள்ளும் வரவேண்டும்.சலுகையாக கூடுதலாக அரை மணி நேரம் மட்டுமே வழங்கப்படும். 

ஆனால் உரிய நேரத்தை மீறி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு தேர்வுக்கு வந்தால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் காலை 9.30 மணிக்கு மதியம் 2.30 மணிக்கும்  தேர்வு தொடங்கும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment