பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை அவதூறாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
குமாரபாளையம் நகர செயலாளர் கோவிந்தன், நகரத் தலைவர் தங்கராஜ், சுதா, கந்தசாமி கணேசன்,கோடீஸ்வரன், ஆறுமுகம் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து குமாரபாளையம் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
No comments:
Post a Comment