• Breaking News

    அதிமுக, திமுக தனித்து போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியாது...... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்து......

     


    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தின் நடைபெற்ற தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் என்று பல கோணங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. 

    எங்களைப் பொருத்தவரை கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு போன்றவைகளை வேறு மாதிரி வைத்துள்ளோம். அதிகார பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் கிடையாது. கொள்கை ரீதியான திட்டங்களை உருவாக்கி அந்த திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது அந்தத் திட்டத்தில் செயல்படுகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும் அவர்கள் இருவரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற இயலாது. கூட்டணி இல்லாமல் திமுக மற்றும் அதிமுக வெற்றி பெறுவது இயலாத காரியம் என்றார். 

    மேலும் சமீப காலமாக கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் சமீபத்தில் திமுக அமைச்சர் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கிடையாது என்று கூறிய நிலையில் அதிமுகவும் அதே போன்று தான் கூறி வருகிறது. இந்த நிலையில் கே பாலகிருஷ்ணன் தனித்து போட்டியிட்டால் கண்டிப்பாக அதிமுக மற்றும் திமுகவால் ஜெயிக்க முடியாது என்று கூறிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    No comments