மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில சிற்பத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் தீபாவளி பண்டிகை சிறப்பு பொது கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல செயலாளர் ஜெயராமன் ஸ்தபதி தலைமை வகித்தார்.
அறிவழகன் ஸ்தபதி ராவணன் ஸ்தபதி சுந்தர் ஸ்தபதி முன்னிலை வகித்தனர்,தர்மராஜ் ஸ்தபதி வரவேற்புரையோடு கூட்டத்தை முறையாக இறை வணக்கத்தோடு துவங்கி சிற்ப கலைஞர்களுக்கு பல்வேறு கருத்து வழங்கி புதிய கிளை சங்கம் துவங்குதல் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் புதிய கிளைச் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்து மாநில செயலாளர் அகோர மூர்த்தி ஸ்தபதி பேசினார்கள்.
மாநில பொருளாளர் கொடியரசு ஸ்தபதி பூம்புகார் கிளை சங்கத்தில் விபத்தில் அடிபட்ட சிற்பக் கலைஞர்களுக்கு விபத்து நிதியை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் பாலு ஸ்தபதி வெங்கடேசன் ஸ்தபதி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் கிழக்கு மண்டல கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இறுதியாக மாநிலத் துணைச் செயலாளர் லயன் மகாலிங்கம் நன்றி உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment