தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, November 2, 2024

தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை கூட்டம்

 


பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் தான் விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். மாநாட்டுக்கு பிறகு சோசியல் மீடியாவில் அரசியல் பிரபலங்கள் விஜயின் கட்சி கொள்கை பற்றி தான் பேசி வருகின்றனர்.

 பலர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பத்தில் விஜயை தம்பி, தம்பி என அழைத்தார். ஆனால் மாநாட்டிற்கு பிறகு கொள்கை ரீதியாக விஜய் தனக்கு எதிரி எனவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்த நிலையில் மாநாடு வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கூட்டணி குறித்து பேசவும் விஜய் நிர்வாகிகளுடன் நாளை பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கூட்டத்தில் தனது சுற்றுப்பயணம் தொடர்பாக பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment