சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி - MAKKAL NERAM

Breaking

Saturday, November 2, 2024

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி


 சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருந்ததால், திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தெற்கு பட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான தினேஷ் சார்ஜாவில் இருந்து தமிழகம் திரும்பிய தினேஷுக்கு, திருச்சி விமான நிலையத்தில் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

தினேஷுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா? என சோதிப்பதற்காக அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு தான் முழுமையான விவரங்கள் தெரிய வரும் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment