• Breaking News

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்

     


    உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கவுள்ள நிலையில், விரதமிருக்கும் பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கி 7 நாள் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி கடற்கரையில் நடைபெறவுள்ளது.

    ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் கோயில் வளாகத்தில் 7 நாட்கள் தங்கி, விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று தொடங்கவுள்ள நிலையில், விரதமிருக்கும் பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    No comments