ஆளுநர் ரவியை இன்று நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - MAKKAL NERAM

Breaking

Monday, December 30, 2024

ஆளுநர் ரவியை இன்று நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

 


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டம் தெரிவித்திருந்த நிலையில் இன்று பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பு குறித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இன்று ராஜ் பவனில் நடிகர் விஜய் ஆளுநரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இன்று மதியம் ஒரு மணிக்கு ஆளுநர் ரவியை ராஜ் பவனில் நேரில் சந்திக்கும் விஜய் சென்னையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க இருக்கிறார். மேலும் நடிகர் விஜய் அதிரடியாக முதல் முறையாக களத்தில் நேரடியாக இறங்கி ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment