சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 25, 2024

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

 


சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பல்கலைக்கழகம் சார்பில் இருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. மாணவியின் புகார் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியிடம் அத்துமீறியவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளிநபர்களா? என்பது தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment