அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 17, 2024

அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை

 


குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்றாகும். ஆப்ரிக்காவில் ஆய்வகம் ஒன்றில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த குரங்கில் இருந்து இதன் வைரஸ் கிருமி எடுக்கப்பட்டதால் இந்த தொற்றுக்கு குரங்கம்மை என்று பெயர்.

 காய்ச்சல், கடும் தலைவலி, சரும கொப்பளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.இந்நிலையில் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வயநாட்டைச் சேர்ந்த அவர், குரங்கம்மை தொற்றுகளுடன் காணப்பட்டதால் பரியவரம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அவரின் உடல்நிலை சீராக இருந்தாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே தலசேரியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் துபாயில் இருந்து கேரளா திரும்பி உள்ளார்.

குரங்கம்மை அறிகுறிகளுடன் அவர் காணப்பட்டதால், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் வெளியான பின்னே, குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here