தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Thursday, December 26, 2024

தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம்


திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் மாதவரம் ராமலட்சுமி பாரடைஸ் திருமண மண்டபத்தில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்,  சென்னை மேற்கு மாவட்டம் மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன், சென்னை மண்டல பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான சி.எச்.சேகர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தகவல் தொழில்நுட்ப அணி செயலாரும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா சிறப்புரையாற்றும் பொழுது, இங்கு உரையாற்றிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உரையாற்றும் பொழுது இளைஞர் அணிக்கு அடுத்ததாக தகவல் தொழில்நுட்ப அணி இரண்டாமிடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றனர். இப்படி கூறும் பொழுது நமக்கு பெருமையாக உள்ளது. நமது அணியை ஒயிட் காலர் அணி என்கிறார்கள். நாம் எல்லோரும் கருப்பு சிவப்பு காலர் எனலாம். அதே போல் களத்தில் மட்டுமல்ல தளத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம். தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்வது போல் வெல்வோம் இருநூறு; படைப்போம் வரலாறு என்பதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்றார்.



இந்நிகழ்ச்சியில் தமிழரசி தங்கபாண்டியன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் திருவிக நகர் தாயகம் கவி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மதுரவாயல் க.கணபதி, சோழிங்கநல்லூர அரவிந்த் ரமேஷ், விருகம்பாக்கம் பிரபாகர்ராஜா, ராயபுரம் ஐடிரீம் இரா.மூர்த்தி, பூவிருந்தவல்லி ஆ.கிருஷ்ணசாமி, தகவல் தொழில்நுட்ப மாநில நிர்வாகிகள் டாக்டர் ஆர்.மகேந்திரன், கோவி.லெனின், எஸ்.டி. இசை அழகிரி சதாசிவம், டாக்டர் ஏ.கே.தருண், நவீன், எஸ்.சுரேஷ், எஸ்.பத்மபிரியா, அ.தமிழ்மாறன், சி.இலக்குவன், எஸ்.பாலா, மு.விஜய கதிரவன், பகுதி செயலாளர்கள் புழல் எம்.நாராயணன், தி.மு. தனியரசு, மை.வ.அருள்தாசன், ஏ.வி. ஆறுமுகம், புழல் ஒன்றிய பொறுப்பாளர் சி.அற்புதராஜ், சென்னை வடகிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ. சீனிவாசன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், கோபிநாத், சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், தகவல் தொழில்நுட்ப மாதவரம் தொகுதி ஹரிஷ், சுரேந்தர், மோனிஷா, திருவொற்றியூர் தொகுதி ராஜேஷ், புவனேஷ்வர், ஹரிணி மற்றும் மாவட்ட பிரதிநிதி புள்ளிலைன் மு.ரமேஷ், வழக்கறிஞர்கள் கமலக்கண்ணன், கபிலன் உள்ளிட்ட மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் ஜி.துக்காராம் நன்றி நவின்றார்.

No comments:

Post a Comment