சென்னை: பறக்கும் ரயில் மேம்பாலத்தில் ஒருவர் கொடூர கொலை - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 10, 2024

சென்னை: பறக்கும் ரயில் மேம்பாலத்தில் ஒருவர் கொடூர கொலை

 


சென்னை மயிலாப்பூரில் பறக்கும் ரயில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட நிலையில் திடீரென மோதல் முற்றியது.

இதில் ஒருவர் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்தார். அவர் பட்டினம் பாக்கம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் பத்தியாஸ் (40) என்பது  தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக திருவான்மியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment