பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 24, 2024

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

 


தமிழ்நாட்டில் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில், டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை கவர்னர் சந்தித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கும், புதிய கல்வி கொள்கைக்கும் தமிழ்நாட்டில் திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் கவர்னர் ஆர்.என். ரவி எடுத்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment